ஓசூர் மாநகராட்சி 25-வது வார்டில் டெங்கு ஒழிப்பு மற்றும் சிறப்பு தூய்மைப் பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் துப்புரவு ஆய்வாளர் உதயகுமார், மேற்பார்வையாளர் வெங்கடேஷ், கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி NCC மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பொதுமக்களிடம் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல், உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சியின் இந்நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.