ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய தீவிர ஆய்வில் 2 கிலோ கஞ்சா மற்றும் 600 கிலோவுக்கும் கூடுதலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
• 2 கிலோ கஞ்சா பறிமுதல் (ஓசூர் நகர்): மகாலட்சுமி நகர் பகுதியில் ஓசூர் நகர் காவல் துறையினர் நடத்திய ஆய்வில், இருசக்கர வண்டியில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த பூஞ்சோலை (47), பிரபாகரன் (23) ஆகிய இருவரைக் கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வண்டியை பறிமுதல் செய்தனர்.
• 100 கிலோ குட்கா பறிமுதல் (மத்திகிரி): சின்ன பேலகொண்டபள்ளி அருகே விடிகாலை 4 மணியளவில் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரில் இருந்து, கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 100 கிலோ குட்கா மற்றும் காரை மத்திகிரி காவல்துறையினர் பறிமுதல் செய்து, போதை பொருட்களை காரில் விட்டு சென்றவர்களை தேடி வருகின்றனர்.
• அரை டன் குட்கா பறிமுதல் (கெலமங்கலம்): ராயக்கோட்டை சாலை ஜக்கேரி சந்திப்பில் கெலமங்கலம் காவல்துறையினர் நடத்திய ஆய்வில், காரில் அரை டன்னுக்கும் (543 கிலோ) கூடுதலான குட்கா கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் (32), ஜித்து (21) மற்றும் கெலமங்கலத்தைச் சேர்ந்த அமர் செரீப் (26) ஆகிய மூவரைக் கைது செய்து, கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.