ஓசூர் அருகே தளி பகுதியில் உரிமம் இன்றி சட்டத்திற்கு புறம்பாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தளி காவல் நிலைய காவலர்கள் தேவர்பெட்டா பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு சிமெண்ட் கிடங்கில் சட்டத்திற்கு புறம்பாக ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் கமுக்கமான தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவலர்கள் அந்தச் சிமெண்ட் கிடங்கிற்குச் சென்று அதிரடி ஆய்வு நடத்தினர்.
அங்கு உரிமம் இல்லாத ஒரு நாட்டுத் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, துப்பாக்கியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அதை வைத்திருந்த நபரை உடனே கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.