கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் உத்தனப்பள்ளி காவல்துறையினர்ர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காகச் சீபம் ஊரை சேர்ந்த 4 நபர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
குற்றப் பின்னணி குறித்த தகவல்:
சப்படி ஊரை சேர்ந்த சங்கர் (33) மற்றும் அவரது உறவினர் திருமல்லேஷ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு சீபம் பகுதியில் இருந்தபோது, மகேஷ் மற்றும் பெருமாள் இருசக்கர வண்டியில் மோத வருவது போல் வந்ததால், வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
வண்டியை ஓட்டிய விதம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மூண்ட இந்த மோதல், பின்னர் சங்கரின் ஊர் வரை நீடித்தது.
இந்தத் தீவிர மோதலின் உச்சகட்டமாக, மகேஷ் என்பவரால் நடத்தப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
காவல்துறை அதிரடி நடவடிக்கை:
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த உத்தனப்பள்ளி காவல்துறையினர், சங்கரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகக் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறையான வழக்குப் பதிவு செய்து, தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மகேஷ் (20), பெருமாள் (20), சிவராஜ் (19) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்தனர்.