HosurOnline

சூளகிரி பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி! அதிரடியாக களத்தில் இறங்கிய சூளகிரி காவல்துறை!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய காவலர்கள் கடந்தநாள் (04.11.2026) தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, சூளகிரி பேருந்து நிலையம் அருகே ஐயத்திற்கு இடமளிக்கும் வகையில் நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவரிடம் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 

அதில், அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பனிரெண்டாயிரத்தி ஐநூறு ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் (Methamphetamine) என்ற வீரியமிக்க போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள் வைத்திருந்த அந்த நபரை காவல்துறையினர் நிகழ்விடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர். 

அவரிடமிருந்த சுமார் 2.50 கிராம் எடையுள்ள Methamphetamine முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நபர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.