HosurOnline

ஓசூர் பேரண்டபள்ளி STRR பாலம் அருகே அதிரடி: உரிய அனுமதியின்றி M-Sand கடத்திய நபர் கைது - சரக்குந்து பறிமுதல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டம், அட்கோ (HUDCO) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட STRR - பேரண்ட பள்ளிபாலம், கதிரேப்பள்ளி அணுகு சாலையில் கடந்த நாள் (03.11.2026) காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் தீவிர போக்குவரத்து ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்குந்தை நிறுத்தி ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில், எவ்வித அரசு அனுமதியும் இன்றி சட்டத்திற்குப் புறம்பாகச் சுமார் 7 Unit M-Sand கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை அட்கோ காவல்துறையினர் நிகழ்விடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்குந்தையும், அதிலிருந்த 7 Unit M-Sand-ஐயும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கைதான நபரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.