கெலமங்கலம் குடிநீர் ஆழ்துளை கிணறா அல்லது குப்பை கிடங்கா?
கெலமங்கலம் பேருந்து நிலையம் மதிலை ஒட்டி குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு அருகே கழிவுகள் கொட்டப்பட்டு, உடல்நல கேடு ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. கெலமங்கலம் ஊராட்சி அலுவலக கழிவுகள் இங்கே கொட்டப்படுவதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக முழுவதும் டெங்கு மலேரியா ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிலையில், உடல் நல கேடு விளைவிக்கும் வகையில் இப்படி ஊராட்சி அலுவலக ஊழியர்களே செயல்படுவது முறையா என கேள்வி எழுப்புகின்றனர்.