ஒசூர் அருகே கிராம நிர்வாக அலுவலர், பத்திர எழுத்தாளர் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக புகார்

1 / 2
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவேநத்தம் ஊராட்சிக்குட்பட்ட அலசெட்டி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் என்பவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2.36 ஏக்கர்கள் நிலத்தை போலி ஆதார் அட்டையை கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது..

இதனையறிந்த நரசிம்மன் உண்மை ஆவணங்களை காண்பித்து சார் பதிவாளரிடம் முறைக்கேட்டை விவரித்து கூறியதை தொடர்ந்து,

பத்திரப்பதிவை ரத்துசெய்ய சார் பதிவாளர் அறிவுறுத்தியும் முறைகேடு செய்த பேவேநத்தம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பத்திர எழுத்தாளர்கள் சந்தோஷ், சந்திரசேகர், வெங்கட்ராஜ், ஆகியோர் அலட்சியமாகவும், மிரட்டும் தொணியில் செயல்பட்டு வருவதாக கூறி,

ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது குற்றநடவடிக்கை எடுப்பதுடன் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதை முழுமையாக நீக்கி பழைய முறையிலேயே வைத்திடக்கோரி பெண்கள் உள்ளிட்ட 10க்கும் அதிகமான நில உரிமையாளர்கள் தேன்கனிக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்