HosurOnline

ஒருத்தருக்கு வேலூர் மற்றவருக்கு சேலம்! பாய்ந்தது குண்டாஸ்!

சட்டத்திற்கு புறம்பாக, கரு ஆணா? பெண்ணா? என மீயொலி அலகீடு (ultrasound scan) மூலம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குருமூர்த்தி ஆகியோர் ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளுக்கே வந்து பாலினம் கண்டறிந்து கூறினராம். 

ஒவ்வொரு ஆய்விற்கும் ரூபாய் 10,000 வீதம் பெற்று கருவின் பாலினம் குறித்து தெரிவித்து வந்துள்ளனர். 

கடந்த செப்டம்பர் 12 ஆம் நாள், கருவியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்மொழிதலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், கடந்த நாள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்தார். 

இதைத்தொடர்ந்து குருமூர்த்தியை சேலம் சிறையிலும், எஸ்தரை வேலூர் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.