ஓசூரில் பள்ளிக்கூடம் மனைகள் விற்பனைக்கு!

ஓசூர் வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட திட்டங்களில் விற்பனையாகாமல் உள்ள வணிகம், பள்ளிக்கூடம் மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மனைகளை வாங்க விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 15 ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக பொறுப்பு அலுவலர் பாண்டியராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.  

விருப்பமுள்ளவர்கள் https://propertysales.tnhb.tn.gov.in/customer-enquiry என்ற இணைய முகவரி மூலம், தங்களது விண்ணப்பத்தை பதிவேற்றலாம்.