சுரேஷ் பாபு என்ற பயணி, "ஆண்டுக்கு கோடிக்கணக்கில் சுங்கக் கட்டணம் வசூலித்தும் (4 ஆண்டுகளில் ரூ.919.91 கோடி), சாலையில் பள்ளங்கள், விரிசல்கள் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது" என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "சுங்கக் கட்டணம் என்பது வரி, எனவே வாகன ஓட்டிகள் நுகர்வோர் அல்ல" என்ற NHAI-ன் வாதத்தை நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்தது.நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
- இழப்பீடு: புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.15,000-மும் வழங்க வேண்டும்.
- ரூ.1 கோடி அபராதம்: ஆண்டுக்கு 1.46 கோடி வாகனங்கள் பயன்படுத்தும் இச்சாலையை அலட்சியமாகப் பராமரித்த சிவா பில்ட்டெக் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி தண்டனைத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இத்தொகை மாநில நுகர்வோர் சட்ட உதவி நிதிக்குச் செல்லும்.
- கெடு: சாலையில் உள்ள அனைத்துப் பள்ளங்கள் மற்றும் குறைபாடுகளை 2 மாதங்களுக்குள் முழுமையாகச் சீரமைக்க வேண்டும்.