🚨 16-Year-Old Girl Escapes from Hosur Police Station | Search Intensifies 👮‍♀️ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚨 16-Year-Old Girl Escapes from Hosur Police Station | Search Intensifies 👮‍♀️

📅 வெளியீடு நாள்: 06-11-2025

📄 விளக்கம்

A 16-year-old girl from Chennai’s Korattur who had gone missing 10 days ago has reportedly escaped from the Hosur All-Women Police Station.

The girl was taken into police protection after locals spotted her near the Hosur bus stand. But when she said she was stepping out to wash her hands, she slipped away unnoticed.

The incident has left the police scrambling for answers, while a search operation is underway to trace her.

🔎 Authorities are urging citizens to share any information that may help locate the missing girl.

💬 This raises a crucial question — how can we make police handling of minors more secure and sensitive?
#HosurNews #MissingPersonAlert #ChildSafety #MissingGirl #ChildSafety #PoliceInvestigation #PublicAwareness #TamilNaduNews #CommunityAlert #WomenPoliceStation #safetyfirst

ஓசூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற 16 வயதுடைய சிறுமி. சென்னையில் தந்தை புகார் கொடுத்திருந்த நிலையில், ஓசூர் காவல் துறையினர் பிடித்து வைத்திருந்த சூழலில், கை கழுவுவதாக சொல்லி நழுவிச் சென்றதால் காவல்துறையினர் திணறல். சென்னை கொரட்டூர் பகுதியில் சேர்ந்த 16 வயதுடைய இளம் பெண், 10 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் கூறிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் பெண்ணின் தந்தை, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஓசூர் பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த இந்த பெண்ணை கண்ட பொதுமக்களில் சிலர், காவல் துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில், பெண் காவலர்கள் தங்களின் பாதுகாப்பில் பிடித்து வைத்திருந்துள்ளனர். உணவு அருந்தி விட்டு கை கழுவுவதாக கூறிச் சென்றவர் நழுவிச் சென்றுள்ளார். காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads