Daily Hosur News · Video
CM Joseph Vijay Focuses on Hosur; Sishya School Clears Stance on Stalled Thali Road Bridge
விளக்கம்
An exclusive report on the upcoming infrastructure boom in Hosur. The article covers the school management's clarification on the railway overbridge, the potential appointment of a dedicated development officer for the region, and a timeline for the Airport, Ring Road, and new connectivity projects.ஓசூர் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தும் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
தளி சாலை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தாங்கள் எவ்விதத்திலும் தடையாக இல்லை என திட்டவட்டமாக கூறும் சிஷ்யா பள்ளி நிர்வாகம். தென்மேற்கு ரயில்வே மேம்பாலம் வேண்டும் என்ற கட்டாய சூழலில் இருக்கும் நிலையில், பள்ளி நிர்வாகமும் தாங்கள் தடையில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியாளர்கள் "யாரோ இருவர் மனு போடுகிறார்கள், பாலம் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்" போன்ற கட்டு கட்டான கதைகளுடன், கட்டி வைத்த கோப்புகளை தூசித் தட்டாமல் வைத்திருப்பது வியப்படையச் செய்கிறது என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்!
ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, மாவட்ட பொறுப்பாளராக உள்ள நிலையில், ஓசூர் பகுதி வளர்ச்சிக்கு என தனியாக உயர் பொறுப்பு அலுவலர் ஒருவர் பணியமர்த்தப்படுவார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.
அத்தகைய சூழலில், கோப்புகளை தூசி தட்டாதவர்கள், தட்டித் தூக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
அடுத்த ஓரிரு மாதங்களில், சூசூவாடி - பேரண்டப்பள்ளி வெளிவட்டச் சாலை, ஓசூர் பத்தலப்பள்ளி பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவமனை வழியாக குருப்பட்டி வரை திட்டமிடப்பட்டுள்ள புதிய இணைப்பு சாலை, உள்வட்டச் சாலையில் அமைந்துள்ள பவானி மண்டபம் முதல் திட்டமிடப்பட்ட மேம்பாலம், தளி சாலை ரயில்வே கிராஸ் மேம்பாலம், விமான நிலையம் என ஏராளமான திட்டங்கள் விரைவில் துவங்கும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்புடன் இல்லாமல், செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என காத்திருக்கும் ஓசூர் மக்கள்!