HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Who is Sashidev? The Hosur Councilor Who Presented a 12-Point Vision to NITI Aayog

Published: 11-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the meeting between Hosur Corporation officials and the NITI Aayog team. The article focuses on Councilor Sashidev's 12 demands, ranging from transportation infrastructure like the airport and metro to civic solutions like GIS mapping and industrial waste recycling.

ஓசூரில் யார் இந்த சசிதேவ்? நிதி ஆயோக் கூட்டத்தில் ஓசூரின் எதிர்கால வளர்ச்சிக்கு 12 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த இவர் யார்?

ஓசூரின் வளர்ச்சிக்கான கருத்துகளைக் கேட்க வந்த நிதி ஆயோக் மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்களுக்கான நிறுவனம் அடங்கிய குழுவினரிடம், நேரடி ரயில் சேவை, விமான நிலையம், பெங்களூரு மெட்ரோ இணைப்பு, கூடுதல் ஒகேனக்கல் குடிநீர் எனப் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளையும், நகரின் எதிர்கால வளர்ச்சியையும் தெளிவாக எடுத்துரைத்தார் மாநகராட்சியின்18-வது வார்டு கவுன்சிலர் சசிதேவ்.

குடிநீர்க் குழாய்கள் உடைவதைத் தடுக்க GIS டிஜிட்டல் வரைபடம், தொழிற்சாலைக் கழிவுநீர் மறுசுழற்சி, தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள் என நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைத்தார்.

இறுதியில், “அடுத்த முறை டெல்லியிலிருந்து நேரடியாக ஓசூர் விமான நிலையத்திற்கே வாருங்கள்!” என்ற அவரது நகைச்சுவையான வேண்டுகோள் கூட்டத்தைக் கலகலப்பாக்கியது.

மக்களின் தேவைகளைப் புரிந்து, நகரின் எதிர்காலத்தையும் சிந்தித்துச் செயல்படும் சசிதேவ் போன்ற புதிய தலைமுறை அரசியல் தலைவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்!
பகிர்: WhatsApp X Facebook Threads