⚡ OLA Factory Under Fire: Employee’s Death Sparks Serious Allegations in Hosur 🏭 | Hosur News Update - Video
⚡ OLA Factory Under Fire: Employee’s Death Sparks Serious Allegations in Hosur 🏭
📅 வெளியீடு நாள்: 06-11-2025
📄 விளக்கம்
Big questions surround OLA’s electric scooter factory near Hosur.
A young employee reportedly took his life, leaving behind a note alleging mental harassment and unpaid wages.
This comes after several customer complaints about poor service and unethical practices.
🚨 Activists are now questioning whether employee pressure and negligence have become part of the company’s culture — despite operating on 1,000+ acres of state-allotted land with major government support.
Shouldn’t corporate success come with human responsibility?
#HosurNews #CorporateAccountability #JusticeForWorkers #CorporateEthics #EmployeeRights #WorkplaceWellness #TamilNadu #IndustryWatch #OLAFactory #JusticeForWorkers #CorporateAccountability #workplacementalhealth
ஓசூர் அருகே மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வண்டி உற்பத்தி செய்யும் ஓலா நிறுவனம், வாடிக்கையாளர்களை மட்டுமின்றி தொழிலாளர்களையும் தற்கொலைக்கு தூண்டுகிறதா? வாடிக்கையாளர்களை துன்புறுத்தியதாக பல வாடிக்கையாளர்கள் பல ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவித்து வந்திருந்த நிலையில், ஊழியர்களையும் அது துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில், தான் ஓலா நிறுவனத்தினால், மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவது இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒதுக்கி கொடுத்த சுமார் 1000 ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் பல சலுகைகளை பெற்றுக்கொண்டு, வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, ஊழியர்களையும் துன்புறுத்துதல் இந்நிறுவனத்தின் கொள்கையா? என தன்னார்வலர்கள் தமிழ்நாடு அரசை கேள்வி எழுப்புகின்றனர்.








