Temple Land Encroachment Removal Near Kelamangalam Leads to Tense Situation | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Temple Land Encroachment Removal Near Kelamangalam Leads to Tense Situation

📅 வெளியீடு நாள்: 09-03-2026

📄 விளக்கம்

Officials from the Hindu Religious and Charitable Endowments Department, accompanied by police, carried out an eviction operation near Kelamangalam following an order from the Madras High Court to remove alleged encroachments on temple land.

Authorities had earlier issued notices to individuals said to have occupied the land. After the court’s March 6 order, officials began demolition work with police protection.

Eyewitnesses at the scene reported a tense moment during the operation when individuals standing on a terrace allegedly splashed petrol toward officials and people present nearby.

Further official details about the incident are awaited.

ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை, சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க அகற்றும் நடவடிக்கையை இந்து அறநிலைத்துறை துவங்கியது.

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் மீது, மொட்டைமாடியில் இருந்து பெட்ரோல் தெளித்ததாக, உறுதிசெய்யப்படாத அதிர்ச்சி தகவல் வெளியாகி, கெலமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கெலமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இந்து கோவில்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை சார்பில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலமுறை அறிக்கைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், இந்து அறநிலைத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.

கடந்த மார்ச் ஆறாம் நாள், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, ஏராளமான காவல்துறையினரின் பாதுகாப்புடன் வந்த அறநிலைத்துறை அதிகாரிகள், இயந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads