HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur’s Agricultural Backbone Under Threat: The Pathalapalli Market vs. Bus Stand Controversy

Published: 06-11-2026  ·  HosurOnline

விளக்கம்

An in-depth look at the history and economic importance of the Pathalapalli Vegetable Market. The article examines the administrative decisions that led to the current conflict with the new bus stand, the failure to utilize lands acquired in 2015 for road expansion, and the potential impact on lakhs of farmers in the Hosur region.

ஓசூரின் முதுகெலும்பிற்கு கேடு விளைவிக்கிறார்களா அரசு அலுவலர்கள்? உழவர்களை வேதனைக்கு உள்ளாக்கலாமா அரசு?

ஓசூரின் அடையாளங்களில் ஒன்று காய்கறி உற்பத்தி. "பத்தலபள்ளி காய்கறி மார்க்கெட்" அதன் முதுகெலும்பு!

அரசர்கள் ஆட்சி செய்த வரலாற்று காலம் முதல், ஓசூரின் சந்தை, இப்போது எம்ஜிஆர் மார்க்கெட் என அழைக்கப்படும் பகுதியில் வாரச்சந்தையாக இயங்கி வந்துள்ளது. பின்னர், காய்கறி மொத்த சந்தையாகவும் செயல்பட்டுள்ளது.

இந்நிலையில், சில அரசியல் தலைவர்களின் குறுக்கீடுகளால், 2003 ஆம் ஆண்டு, பத்தலபள்ளி காய்கறி சந்தை துவங்கப்பட்டது.

முறையான அனுமதிகளுடன் கடந்த 23 ஆண்டுகளாக செயல்படும் சந்தை, சட்டத்தை மீறியதாக இதுவரை எந்த காவல் நிலையத்திலும் வழக்கு இல்லை என குறிப்பிடுகின்றனர்.

இச்சந்தையில் இருந்து, பல லட்சம் ரூபாய் காய்கறிகள் நாள்தோறும் இந்தியாவின் பிற மாநிலங்கள் உட்பட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சந்தையின் வருகை மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், போன்ற வளர்ச்சியை இப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. அருகில் சிப்காட் இரண்டு தொழிற்பேட்டை உள்ளது.

ஓசூர் பேருந்து நிலையத்தை இப்பகுதியில் கட்டுவதற்கு ஐஏஎஸ் அலுவலர் தலைமையிலான குழு திட்டமிட்டு, பேருந்து நிலையத்தை கட்டியும் முடித்து விட்டனர்.

இப்போது, இந்த பத்தலபள்ளி காய்கறி சந்தை, தாங்கள் புதிதாக கட்டிய பேருந்து நிலையத்திற்கு இடையூறு என்று சொல்கிறார்கள்!

இங்கே நமது கேள்வி:

உலகம் அறிந்த காய்கறி சந்தை அருகே பேருந்து நிலையத்தை கட்ட திட்டமிட்டது யார் குற்றம்?

2015 ஆம் ஆண்டு வாக்கில், சாலை விரிவாக்கத்திற்காக சூசூவாடி முதல் பேரண்டபள்ளி வரை நிலம் கையகப்படுத்தி, உரிமையாளர்களுக்கு பணம் செலுத்தப்பட்ட நிலையிலும், அந்த நிலங்களை சாலை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பது யார் குற்றம்?

நிலத்தை பயன்படுத்தாதது குறித்து நெடுஞ்சாலை துறையிடம் வினவினால், மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின்வாரியம் பணம் கேட்கிறது, அதனால் நாங்கள் நிலத்தை பயன்படுத்தவில்லை என கூறுவது, இவர்கள் அரசு அலுவலர்களா? அல்லது பால்வாடி குழந்தைகளா? கையகப்படுத்திய நிலத்தை தனியாரிடமே வைத்து இருப்பது யார் குற்றம்?

பகுதி உழவர்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தும் இடத்தை, பூனை குட்டியை கடத்துவது போன்று அடிக்கடி கடத்தும் செயல், நமது தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றுக் கொள்வாரா?

அரசு அலுவலர்கள் முயற்சியால், இந்த சந்தை செயல்பாடு தடுக்கப்படுமேயானால், நேரடியாக பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், ஓசூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான உழவர் பெருமக்களும் பாதிப்படைவார்கள் என்று கூறப்படுகிறது. அரசு அலுவலர்களுக்கு இதில் புரிதல் உள்ளதா?

பாலம் கட்டுமான பணி துவங்கப்பட்ட உடன், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றி, இன்றுவரை இச்சந்தை செயல்பாட்டினால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படவில்லை எனக் கூறுகின்றனர். அப்படி இருக்க இந்த சந்தையை மூட முனைப்பு காட்டுவதன் பின்னணி என்ன?

இன்று சாலை போக்குவரத்து நெரிசலை காட்டி இந்த சந்தையை மூட முனைப்பு காட்டும் அரசு அலுவலர்கள், சாலை நெரிசல் தொடர்ந்தால் பேருந்து நிலையத்தையும் மூடி பூனை குட்டியை கடத்துவது போன்று கடத்துவார்களா?

இப்போது நீங்கள் தான் நீதிபதி? உங்கள் தீர்ப்பை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
பகிர்: WhatsApp X Facebook Threads