Calls Grow for Hosur Leaders to Raise Tamil Nadu's Concerns Over the Mekedatu Project | Hosur News Update - Video
Calls Grow for Hosur Leaders to Raise Tamil Nadu's Concerns Over the Mekedatu Project
📅 வெளியீடு நாள்: 31-05-2026
📄 விளக்கம்
Karnataka CM D.K. Shivakumar has stated that the Mekedatu project will be pursued despite continued opposition from Tamil Nadu.
Since he had previously campaigned in the Hosur region during the Tamil Nadu Assembly elections, some are now calling on local political leaders to use their connections and collectively voice Tamil Nadu's concerns regarding the project.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தமிழ்நாடு எதிர்த்து வரும் மேகதாது திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது, தளி சட்டமன்ற உறுப்பினர் டி. இராமச்சந்திரன் மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பாத்தகோட்டை சீனிவாசனுக்கு ஆதரவாக, ஓசூர் பகுதியில் டி.கே. சிவகுமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.
ஓசூர் மற்றும் கர்நாடக அரசியல் தலைவர்களுக்கிடையே நெருக்கமான உறவுகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மேகதாது திட்டத்தை கைவிட வலியுறுத்த, உள்ளூர் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.








