HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Protest at Hosur–Attibele Border; TN Government Buses to Bengaluru Temporarily Suspended

Published: 26-07-2026  ·  HosurOnline

விளக்கம்

More than 50 people staged a protest at the Hosur–Attibele border on Sunday afternoon, carrying plastic pots and beating drums. As a precautionary measure, Tamil Nadu government buses to Bengaluru were temporarily suspended from 4 AM until the protest concluded. However, Karnataka government buses, private buses, road traffic, and industrial activities continued without major disruption under tight police security from both states.

ஓசூர் அத்திப்பள்ளி எல்லையில், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள், பிளாஸ்டிக் குடங்களுடன், மோளங்கள் தட்டி ஊர்வலமாக இன்று பகல் பன்னிரண்டு மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடக மற்றும் தனியார் பேருந்துகள், ஓசூரில் இருந்து வழக்கமாக கர்நாடகாவிற்கு சென்று வந்த நிலையில், தமிழ்நாடு அரசு பேருந்துகள் இன்று காலை நான்கு மணி முதல் ஆர்ப்பாட்டம் முடியும் வரை பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. எவ்வித தடையும் இன்றி, வழக்கம் போல சாலை போக்குவரத்து அத்திப்பள்ளியில் செயல்பட்டது.

அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருவதால், அத்திப்பள்ளியில் எவ்வித சலசலப்புமின்றி தொழில் நிறுவனங்கள் இயங்கின. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பு வழங்கினர்.
பகிர்: WhatsApp X Facebook Threads