₹2.25 Lakh Worth of Banned Narcotics Seized in Denkanikottai; SUV Driver Flees Police Check | Hosur News Update - Video
₹2.25 Lakh Worth of Banned Narcotics Seized in Denkanikottai; SUV Driver Flees Police Check
📅 வெளியீடு நாள்: 25-07-2026
📄 விளக்கம்
An early morning vehicle inspection by Denkanikottai police resulted in the seizure of banned narcotic substances worth approximately ₹2.25 lakh. According to police, the driver of a Mahindra XUV500 abandoned the vehicle and fled before officers could complete the inspection. The investigation also revealed that the SUV was allegedly displaying a fake registration number. Police have seized the vehicle and narcotics and launched a search for the absconding suspect.
தேன்கனிக்கோட்டையில் விடிகாலை 4 மணிக்கு போதை பொருள் கடத்திய காரை மடக்கி பிடித்த காவல்துறையினர். காவல் ஆய்வாளர் சாவித்திரி, சிறப்பு காவல் சார் ஆய்வாளர் சீனிவாசன், தலைமை காவலர்கள் பிரபு மற்றும் குழந்தைவேல் ஆகியோர், தேன்கனிக்கோட்டை தளி பிரிவு சாலையில் விடிகாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தளி பகுதியில் இருந்து வந்த மகேந்திரா எக்ஸ்யூவி 500 வெள்ளை நிற காரை நிறுத்தி காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள முயற்சி கையில், ஓட்டுநர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பினாராம்.
மேற்கொண்டு வண்டியை ஆய்வு செய்தபோது, அதன் பதிவு எண் போலியானது என கண்டறியப்பட்டது. மேலும் அதனுள், சுமார் இரண்டே கால் லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருள் கண்டறியப்பட்டது.
வண்டியும் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்ட நிலையில், தப்பி சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.








