🔴 Breaking News: Hosur bridge Repair start Near Bus Stand Heavy Traffic Alert 🚦 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🔴 Breaking News: Hosur bridge Repair start Near Bus Stand Heavy Traffic Alert 🚦

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

⚠️ Breaking Traffic Alert – Hosur ⚠️
Bridge repair work opposite Hosur Bus Stand begins today (Aug 18). For the next 4 days, expect severe traffic congestion on:

Hosur Inner Ring Road

Bus Stand Junction

Bagalur Road Signal

🚧 Police & Traffic Wardens are managing the situation, but public cooperation is vital.
👉 Avoid unnecessary travel and use alternative routes to ensure safety.

Stay tuned for further updates.

ஓசூரில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவ உள்ளது. ஓசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள பாலம் பியரிங் உடைந்து, பழுது செய்யும் பணி ஆகஸ்ட் 18 ஆம் நாள் முதல் முழு வீச்சில் நடைபெறுகிறது.

இதனால், பேருந்து நிலையம், உள் வட்டச் சாலை, பாகலூர் சாலை சந்திப்பு போன்ற பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.

காவல்துறையினர், ஓசூர் டிராபிக் வார்டன்கள் உதவியுடன், இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொதுமக்கள் கடுமையாக பாதிப்படையாத வகையில், சீர் செய்வதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசூர் பேருந்து நிலையம் எதிர்புறம் மற்றும் எதிர் சாலை பகுதியில் அமைந்துள்ள மலர் விற்பனையாளர்கள் உள்ளிட்ட சாலையோர விற்பனையாளர்கள் அனைவரையும், பாலம் சரி செய்து முடியும் வரை, அப்பகுதியில் கடை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தேவையில்லாமல் இப்பகுதிகளில் செல்லாமல், மாற்று சாலைகளை பயன்படுத்தி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads