Daily Hosur News · Video
The Missing Rs 9 Lakhs: Anchetty Panchayat Clerk Blames PM Modi for Stalled Bedarahalli Road Project
விளக்கம்
An investigative report into the 300-meter road crisis in Bedarahalli. The article details the allocation of ₹9 lakhs under MGNREGA, the impact of the broken road on local teachers and villagers, and the controversial statement by the Thakkatti Panchayat Clerk regarding the "VB-G RAM G" scheme name change.அஞ்செட்டி அருகே அரசு திட்டத்தில் வந்த ஒன்பது லட்சம் ரூபாயை காணவில்லை! பிரதமர் மோடி பணத்தை எடுத்துக் கொண்டாரா! அதிர்ச்சியா இருக்கா? கதையை முழுசா கேளுங்க!
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பேடர-அள்ளி எனும் ஊர். இவ்வூரில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். இங்கு ஒரு அரசு துவக்க பள்ளியும் உள்ளது.
சூலகுண்டா சாலையில் இருந்து, பேடர-அள்ளி செல்லும் சுமார் 300 மீட்டர் சாலை, நெடு நாட்களாக பழுதடைந்து இருப்பதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கு வந்து செல்லும் ஆசிரியர்களும் கரடு முரடான சாலைகள் பலமுறை விழுந்துள்ளனராம்.
அதனால் சாலையை சீர் செய்து தர வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சாலையை சீர் செய்ய 9 லட்சம் ரூபாயை இந்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஏதோ ஒரு உள்நோக்கத்தினால், பல மாதங்களாக சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே. பணம் வழங்கப்பட்ட திட்டத்தின் பெயர் VB-G RAM G என மாற்றமடைந்துள்ளது. பெயர் மாற்றத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட பணமும் எவ்விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகாது என இந்திய அரசு தெள்ளத் தெளிவாக அறிவித்திருந்தது.
இன்று நாம் அப்பகுதிக்குச் சென்ற நிலையில், "சாலை ஏன் சீரமைக்கப்படவில்லை" என்ற, தொலைபேசி மூலம் தக்கட்டி ஊராட்சி கிளர்க் சிவக்குமார் என்பவரை வினவினோம்.
அவர் அதற்கு, திட்டத்தின் பெயர் மாற்றமடைந்ததால், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டது என, கூலாக பதில் கூறினார். அதிர்ச்சியில் தளி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் தொலைபேசியை எடுக்கவே இல்லை.
மாவட்ட ஆட்சியர் பி டி ஓ அலுவலகத்தில் இருந்து இந்த பணத்தை மீட்டு, சாலை அமைத்து தர வழிவகை செய்வார் என காத்திருக்கின்றனர் மக்கள்.
பஞ்சாயத்து கிளர்க் பதில் குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்!