Daily Hosur News · Video
Hosur Student Mansi Sivakumar Shatters 14-Year National Record; Wins Gold in CBSE Athletics
விளக்கம்
A detailed report on Mansi Sivakumar's historic performance at the CBSE National Athletics Championship in Patiala. The article highlights her record-breaking 25.12-second sprint in the 200m category and the celebratory event held at Advaith International Academy in Hosur.தேசிய அளவில் 14 ஆண்டு சாதனையை முறியடித்த ஓசூர் பள்ளி மாணவி!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் சிபிஎஸ்சி தேசிய அத்தலடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 16ஆம் நாள் நடைபெற்றது. இதில் ஓசூரை சேர்ந்த மான்சி சிவக்குமார் என்ற மாணவி, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், 2012 ஆம் ஆண்டு புரிந்த 25.68 நொடிகள் என்ற சாதனையை, இவர் 25.12 நொடிகளில் கடந்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
அவரை பெருமைப்படுத்தும் விதமாக இன்று காலை ஓசூர் அத்வைத் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கமெண்ட் பாக்ஸில் மாணவிக்கு வாழ்த்துச் செய்தி பதிவிடலாமே!