Daily Hosur News · Video
Armed Thieves Attempt Midnight Heist in Hosur Residential Areas; Police Response Sparks Public Outrage
விளக்கம்
A detailed report on the attempted burglaries in Manjunatha Layout and Shanthini Kethan. The article covers the 3 AM timeline, the use of sickles by the gang, the evidence left behind (a lungi), and the controversial statement made by a Mathigiri Sub-Inspector regarding public self-protection.கைலியை மறந்து சென்ற திருடன்! மூன்று திருடர்கள் அருவாளுடன், இன்று விடி காலை மூன்று மணி முதல்! "காவல்துறையால் என்ன செய்ய முடியும்? நீங்களே தான் உங்களை பாதுகாக்க வேண்டும்" என பதில் கூறும் காவல் சார் ஆய்வாளர்! அச்சத்தில் பொதுமக்கள்!
ஓசூர் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தளி சாலை கிராண்ட் சினிமாஸ் எதிர்ப்புறம் அமைந்துள்ளது, மஞ்சுநாதா லேஅவுட் மற்றும் சாந்தினி கேதன் குடியிருப்பு பகுதிகள்.
இன்று விடிகாலை 3 மணி முதல் மூன்று திருடர்கள், இரண்டு வீடுகளை உடைத்து உள்ளே போக முயற்சிக்குள்ளனர்! அதுவும் வீட்டிற்குள் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்திருந்தும்! இதில் கவனிக்க வேண்டியது, இந்த திருட்டு முயற்சி நடப்பதற்கு சற்று முன்பு, காவல்துறையினர் இப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியை மேற்கொண்டனராம்!
இரண்டு வீடுகளிலும் நல்லூளாக வீட்டினுள் இருந்தவர்கள் விழித்தெழுந்து விளக்கை சுவிட்ச் ஆன் செய்தவுடன், திருடர்கள் தப்பி சென்றுள்ளனர்! இதில் ஒரு வீட்டில், அருகில் இருந்த அருவாளையும் பயன்படுத்தி இருப்பது பகுதி மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிசிடிவி பொருத்தினால் திருடர்கள் நடமாட்டத்தை தடுக்கலாம் என்றார்கள். இப்போது அவற்றின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேடிக்கை காட்சிகளாக வெளியிடுவதற்கு தான் பயன்படுகிறது!
நீங்கள் ஓசூரில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? காவல்துறை என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.