Daily Hosur News · Video
Heartbroken Owner Appeals for Help After TVS Raider Stolen in Hosur Sitaram Nagar
விளக்கம்
A report on the theft of a TVS Raider motorcycle in the Sitaram Nagar area of Hosur. The article details the CCTV evidence showing two suspects, the emotional social media post by the owner, and the current status of the FIR at the Adco Police Station.ஓசூரில் செல்லமாக வைத்திருந்த டிவிஎஸ் ரைடர் பைக் திருட்டு! வேதனையில் அதன் உரிமையாளர் - "செல்லமே உன்னை தேடி ஏங்குகிறேன்" என சமூக ஊடகங்களில் பதிவு!
ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் கடந்த செப்டம்பர் 29 மாலை வண்டியை பாதுகாப்பாக நிறுத்திய நிலையில், மறுநாள் காலையில் காணவில்லை என்பதால் அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து கட்டிட உரிமையாளரின் உதவியுடன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, வண்டி விடியற்காலை இரண்டு மணி அளவில் இருவர் திருடி சென்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அட்கோ காவல் நிலையத்தில் FIR பதிந்து, தனது இரு சக்கர வண்டியை மீட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் உரிமையாளர் கோரிக்கை விடுக்கிறார்.