HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

20 Years of Negligence: Chinnatti Residents Demand Action or Autonomy Over Jammukana Kudagai Lake

Published: 06-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the administrative deadlock surrounding the 27-acre lake in Kelamangalam. The article covers the BDO's recent admission of ownership, the technical failures of the retaining wall, and the community's bold offer to undertake restoration themselves.

ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் "ஓனர் இவர் தான்... ஆனால் இதற்கு இவர் சரிப்பட்டு வர மாட்டார்"! எனக் கூறும் பொதுமக்கள். "எடுத்துக்க மாட்டேன் என்கிறார்கள்" என்று புலம்பும் வட்டார வளர்ச்சி அலுவலர்.

கெலமங்கலம் அடுத்த சின்னட்டியில் 27 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் ஜம்முக்கான குடகை ஏரி அமைந்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஏரியின் தடுப்புச் சுவர், 20 ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்து விட்டது.

மக்கள் பலமுறை மனு கொடுத்தும், அதை சீர் செய்வதற்கு அடுத்தடுத்து வந்த அரசுகள் முயற்சி எடுக்கவில்லையாம். "ஏரி எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை" என எல்லாத் துறை அலுவலர்களும் தொடர்ந்து நழுவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நாள் BDO, ஏரி தங்களுடையது என்று ஏற்றுக் கொண்டார். அவர் எம்மிடம் "தண்ணீர் அடி வழியாக கசிகிறது, கசிவை நிறுத்திக் கொடுத்தால் கெலமங்கலம் ஊராட்சி எடுத்துக் கொள்வதாக கூறுகிறது" என்றார். இவரின் கூற்று, தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து இருபது ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு முறை கூட இவர் துறை சார்ந்தவர்கள் நேரடி ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

"ஏரிக்கு ஓனராக பிடிஓ இருந்தாலும், இதை சரி செய்ய அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்றால், எங்களிடம் கொடுத்து விடுங்கள், நாங்களே சரி செய்து கொள்கிறோம்" என மக்கள் குரல் எழுப்புகின்றனர்.

ஓனர் சரி செய்வாரா? மாவட்ட ஆட்சியர் இதில் நடவடிக்கை எடுப்பாரா? காத்திருக்கும் மக்கள்.
பகிர்: WhatsApp X Facebook Threads