Daily Hosur News · Video
Delta Electronics Employee Ends Life Due to Alleged Work Pressure; Activists Demand Government Intervention
விளக்கம்
A detailed report on the death of a 28-year-old youth from Paramakudi employed at Delta Electronics near Shoolagiri. The article explores the challenges faced by contract workers in Hosur, the "Sweatshop" allegations by volunteers, and the appeal to CM Joseph Vijay for worker welfare reforms.ஓசூர் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் வேலை அழுத்தத்தால் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாரா ஊழியர்?!
தைவானை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே குருபரப்பள்ளியில் தொழிற்சாலை அமைத்துள்ளது. இங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனராம். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என கூறப்படுகிறது.
28 வயதுடைய பரமக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றியும், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான மாத ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் இல்லாத சூழலில், பணிசுமையால் மன அழுத்தம் ஏற்பட்டு, தன் உயிரை மாய்த்துக்கொள்ள ராம் நகர் மாரியம்மன் கோவில் அருகே முயன்றுள்ளார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
ஓசூரில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள், Sweat Shop போன்று இயங்குவதாக தன்னார்வலர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலம் காக்க, தொழிலாளர்களுக்கு மனப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார் என தன்னார்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.