Daily Hosur News · Video
Beyond Cybercrime: The Systematic Land Record Irregularities Plaguing Hosur and Its Surroundings
விளக்கம்
An investigative report into the various methods used by officials and middlemen to manipulate land records in Hosur. The article covers the ₹10,000 bribe demands for surveys, the role of certain legal advisors in creating fear among buyers, and the technical "glitches" used to alter Patta and Chitta records for extortion.சைபர் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் எல்லாம் புதுசு... ஓசூர் சர்வேயர் அலுவலக முறைகேடுகள் எல்லாம் பழசு!
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நிலங்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கக்கூடிய சூழலில், எங்களுக்கு பழைய டெக்னிக்கே போதும், புதுசு எல்லாம் வேஸ்ட், என்கிற மனநிலையில் எந்தெந்த வகையில் எல்லாம் தில்லாலங்கடி வேலை செய்கிறார்கள் என்பது குறித்த பார்வை இது.
நம்மிடம் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் காங்கிரஸின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், சர்வேயர் வேலையை முடித்துத் தர பத்தாயிரம் ரூபாய் கையூட்டு மிரட்டி கேட்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத CREDAI அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது... "Legal Opinion" இல்லாமல் எந்த நில விற்பனையும் நடைபெறுவது இல்லை. இதற்கு ஓசூரில் பல சட்ட ஆலோசகர்கள் இருந்தாலும், அவர்களில் நால்வர் முதன்மையானவர்கள். அவர்களில் ஒருவர், "இந்த நிலத்தை வாங்கறதா இருந்தா வாங்குங்க... இப்போது அல்லது 30 ஆண்டுகள் என எப்போது வேண்டுமானாலும் இதில் வில்லங்கம் வரலாம்" என ஒரு போடு போடுவாராம். வாங்குபவர் பதறிய நிலையில், தனது ஆட்கள் மூலம் விற்பவரை படிய வைப்பாராம். அதன் பின் அவருக்கென்ன... சட்ட ஆலோசனையில் ஒரு Fees... நிலத் தரகில் ஒரு Commission... விலையை அடித்துப் பேசி அதில் ஒரு வருவாய்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்... அவர் பெயர் ... "ம..." வேண்டாம்! இது சட்ட சிக்கல்...
அடுத்து வருவது பட்டா! வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் மட்டும்தான் Systemத்தினுள் நுழைந்து மாறுதல்களை மேற்கொள்ள முடியுமாம். வெட்டியாக அமர்ந்திருக்கும் பொழுது, Systemத்தினுள் Login செய்து, Randamமாக யாருடைய பட்டாவிலாவது, அவரது பெயரில் பிழையை ஏற்படுத்தி விடுவார்களாம். எடுத்துக்காட்டாக முத்துக்குமரன் என பெயர் இருந்தால், முத்து இருக்கும்... குமரன் காணாமல் போய்விடும். முத்துக்குமரன் என்றைக்காவது சொத்தை விற்க முயற்சித்தால், Legal Opinion பெறுவதில் சிக்கல் ஏற்படும். அதை வைத்து கறக்கப்படுவது என்னமோ பல லட்சம் ரூபாயாம்!
சிட்டாவில் என்ன செய்யலாம்? நிலம் என்று இருந்தால், ஐந்து ஏக்கர் அல்லது பத்து ஏக்கர் என முழு அளவாக இருக்காது. நல்லூர் அருகே சர்ச்சுக்கு என 12 சென்ட் நிலம் வாங்கியதில், பட்டாவிலும் எஃப் எம் பி யிலும் நில அளவு சரியாக உள்ள நிலையில், சிட்டாவில் 1000 சதுர அடி என்று இருக்கிறதாம்! சர்ச் நிலம் ஒருபுறம் இருக்கட்டும்... 10 சென்ட் நிலத்திற்கு 10 லட்சம் கொடுத்த கதையை கேட்கலாம். ஐந்து ஏக்கர் 10 சென்ட் நிலத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கான ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டதாம். சிட்டாவில் 10 சென்ட் நிலத்தை காணவில்லையாம்! ஐஏஎஸ் அதிகாரி தலையிடுகிறார் என்ற உடன், நிலமே சில நாட்களுக்கு மொத்தமாக சிஸ்டத்தில் காணாமல் போய்விட்டதாம். கடைசியில் பத்து சென்ட்டுக்கு 10 லட்சம் அழுதுள்ளார்கள்.
அம்பானி அதானி எல்லாம் டூப்பு... நம்ம சர்வேயர் தான் டாப்பு!