Daily Hosur News · Video
21-Year-Old Youth Brutally Murdered by 15-Member Gang Near Utthanapalli; Relatives Stage Protest
விளக்கம்
A detailed report on the murder of Lakshmipathy (Chinni) in Chinna Pettiganapalli. The article covers the background of the dispute involving the harassment of a friend's sister, the details of the gang attack, and the subsequent protest by the victim's family at the Utthanapalli Police Station.ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே நள்ளிரவில் பயங்கரம்! 15 பேர் கொண்ட கும்பல் செய்த கொடூரம்!
உத்தனப்பள்ளி அடுத்த யாகனபள்ளியைச் சேர்ந்தவர் சின்னி என்ற 21 வயதுடைய லட்சுமிபதி. இவருடைய நண்பரின் தங்கைக்கு ஒரு இளைஞர் தொல்லை கொடுத்து வந்தாராம். இதைத் தொடர்ந்து நண்பருடன் சேர்ந்து, அந்த இளைஞருக்கு அறிவுரை கூற சின்ன பேட்டிகாணபள்ளி ஊருக்கு சென்றுள்ளார். அங்கு 15 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கியதாகவும், அதில் நிகழ்விடத்திலேயே பலியானார் என தகவல். குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை வேண்டி உத்தனப்பள்ளி காவல் நிலையம் அருகே அவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.