Daily Hosur News · Video
Four Wild Elephants Reach Beerjepalli Lake via Bommepalli; Paddy and Flower Crops Damaged
விளக்கம்
A report on the recent movement of four elephants from the Bannerghatta forest range to the Sanamavu forest border. The article details the damage caused to local agriculture near Beerjepalli Lake and highlights the unique feeding habits of the elephants observed by locals.ஓசூர் அருகே வந்த காட்டு யானைகள்! வந்து என்ன செய்தது தெரியுமா?
பன்னர்கட்டா காடுகளிலிருந்து பொம்மேப்பள்ளி வழியாக சானமாவு காடு அருகே அமைந்துள்ள பீர்ஜேபள்ளி ஏரி பகுதிக்கு நான்கு யானைகள் வலசை வந்துள்ளன. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான யானைகள் ஓசூர் காடுகள் வழியாக வலசை வந்து செல்வது வழக்கம்.
காட்டு யானைகள் ஏரி அருகே விளைந்து நின்ற நெற்கதிர்களையும், பூச்செடி தோட்டத்தையும் மிதித்துச் சென்றதால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
யானைகள் பெருத்த உடலைக் கொண்டு இருந்தாலும், நாற்றுக்கு பாதிப்பு ஏற்படாத படி, லாவகமாக நெற்கதிர்களை மட்டும் துதிக்கைகளால் உருவி உண்டு சென்றுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.
காட்டு யானைகளால் விளைபொருட்கள் பாதிப்படைந்த அனுபவம் கொண்டவரா நீங்கள்? யானைகள் மற்றும் மனிதர்களுக்கு மோதல் ஏற்படாத படி, வனத்துறையினர் எவ்வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உங்களது கருத்தை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.