Daily Hosur News · Video
Hosur Town Police Arrest Mastermind in ₹25 Lakh Voice-Modulation and Ritual Fraud Case
விளக்கம்
A detailed report on the police operation that led to the arrest of a 21-year-old from Krishnagiri. The article covers the technical investigation methods used by the Hosur police, the suspect's arrest during a visit to the victims' home, and the shocking revelations made during the initial interrogation.ஓசூர் காவல் துறையினர் எவ்வாறு 25 லட்சம் ரூபாய் ஆட்டைய போட்ட பலே கில்லாடியை வளைத்து பிடித்தனர்?
ஓசூர் காலேகுண்டா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரை, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர், பெண் மற்றும் ஆண் குரல்களில் குரலை மாற்றி பேசி, காதல் வலையில் விழ வைத்து, 100 கோடி ரூபாய் புதையல் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி, சுமார் 25 லட்சம் ரூபாய் வரை, சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்களை கொண்ட மொத்த குடும்பத்தையும் 120 நாட்களாக வீட்டுச் சிறையில் வைத்து, ஏமாற்றியதாக குற்றச்சாட்டு!
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் மற்றும் குடும்பத்தார், ஓசூர் நகர காவல் நிலையத்தில், புகார் அளித்திருந்தனர்.
விசாரணையில் முழு தகவல் கிடைக்கப் பெறாத நிலையில், திறம்பட செயல்பட்ட ஓசூர் காவல்துறையினர், குடும்பத்தார் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபரின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கூர்ந்து கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த நாள் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், புகார் கொடுத்த குடும்பத்தாரை ஓசூருக்கு நேரில் வந்து சந்திக்க வந்துள்ளார். குற்றவாளியின் வருகையை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அந்த நபரை கைது கைது செய்தனர்.
அந்த 21 வயது நபருக்கு அடுத்த சில நாட்களில் ஏதோ சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல். விசாரணையில் இதுபோன்ற பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.