HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Irular Tribal Families at Beerjebpalli Near Hosur Seek Safe Housing Amid Wildlife Concerns

Published: 28-01-2026  ·  HosurOnline

விளக்கம்

The Tamil Nadu government has allotted residential land pattas to 24 Irular tribal families at Beerjebpalli near Hosur, with each family receiving about 1.5 cents of land. While the families have built temporary huts on the site, they say the location’s proximity to forest areas has led to frequent movement of wild animals, posing a threat to children and elders. The residents have requested the district administration to provide permanent houses under an appropriate government housing scheme.

ஓசூரை அடுத்த பீர்ஜேபள்ளியில், இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 24 குடும்பத்தாருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சுமார் ஒன்றரை சென்ட் நிலம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் குடிசை அமைத்து இந்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமான மற்றும் சாணமாவு காட்டிற்கு ஒட்டிய பகுதி என்பதால், அடிக்கடி யானை, சிறுத்தை உள்ளிட்ட காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதாக கூறுகின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உயிருக்கு, விலங்குகளின் நடமாட்டம் அச்சுறுத்தலாக அமைகிறதாம். குடிசை வீடுகளை, அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ், முறையான வீடுகளாக அமைத்துத் தந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஆகவே, மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads