Only Half of Registered Students Eat School Breakfast? Observations Raise Questions | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Only Half of Registered Students Eat School Breakfast? Observations Raise Questions

📅 வெளியீடு நாள்: 25-06-2026

📄 விளக்கம்

Teachers, staff, parents and students in the Bettamugilalam region shared observations regarding participation in the government breakfast scheme, raising questions about beneficiary counts and food allocations.

A visit to government schools in the Bettamugilalam region has raised questions regarding participation in Tamil Nadu's breakfast scheme.

Teachers and food service staff told HosurOnline that, on average, only around half of the students registered under the scheme consume breakfast at school on a typical day. Meanwhile, many parents and students said breakfast is often eaten at home before school.

The observations have prompted questions about how beneficiary participation and food allocations are calculated within the scheme.

பாதி தான் கணக்கு... மீதம்?... இது புரியாத புதிர்!...

பெட்டமுகிலாலம் பகுதியில் உள்ள கோட்டையூர் கொல்லை, சித்தாபுரம் மற்றும் போலாக்கொல்லை பள்ளிகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.

அனைத்து பள்ளிகளிலும், காலை உணவு திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்துள்ள மாணாக்கர்களில், சராசரியாக 50 விழுக்காடு மாணாக்கர்கள் மட்டுமே காலை உணவு உண்பதாகவும், உணவுப் பொருட்களை கணக்கிடுவதை பொருத்தவரை, அனைத்து பதிவு செய்துள்ள மாணாக்கர்களும் உணவு உண்டதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என ஆசிரியர் பெருமக்களும், உணவு செய்து வழங்கும் ஊழியர்களும் எம்மிடம் தெரிவித்தனர்.

சித்தாபுரம் பள்ளி சமையல் ஊழியர் பதில் கூற தயங்கிய நிலையில், அப்பள்ளியின் தலைமையாசிரியர், இத்தகவலை எம்மிடம் தெரிவித்தார்.

பெரும்பாலான பெற்றோர், குழந்தைகளுக்கு நாள்தோறும் வீட்டிலேயே காலை உணவு வழங்கி பள்ளிக்கு அனுப்புவதாக கூறினர். பெரும்பாலான பள்ளி குழந்தைகளும், தாங்கள் வீட்டிலேயே நாள்தோறும் காலை உணவு உண்பதாக தெரிவித்தனர்.

வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறைந்த அளவாக உள்ளதா? அல்லது, குறைந்த அளவில் உணவு செய்து, மீதமுள்ள பொருட்கள் எதற்கு பயன்படுகிறது?... இது எமக்கு புரியாத புதிர்!...

பகிர்: WhatsApp Twitter Facebook Threads