Denkanikottai Mariamman Festival: Flying Kavadi, Body Piercing and Vehicle-Pulling Vows Draw Thousands | Hosur News Update - Video
Denkanikottai Mariamman Festival: Flying Kavadi, Body Piercing and Vehicle-Pulling Vows Draw Thousands
📅 வெளியீடு நாள்: 22-07-2026
📄 விளக்கம்
Thousands of devotees participated in the annual Mariamman Temple festival in Denkanikottai, Krishnagiri district.
Following the fire-walking ceremony held the previous evening, devotees joined a grand procession from the Kottai Vaasal Mariamman Temple and the Salem Mariamman Temple to the Ther Pettai Mariamman Temple, fulfilling their vows through traditional rituals including flying kavadi, body piercing, and vehicle-pulling.
தேன்கனிக்கோட்டையில் இன்று ஊர் திருவிழா!. ஆண்கள் பறக்கும் காவடியில் தொங்கியும், பெண்கள் கார் மற்றும் ஆட்டோக்களை அலகினால் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி காண்போரை ஆன்மீக நம்பிக்கையில் ஆழ்த்தியது.
கடந்த நாள் துவங்கிய இந்த விழாவின் தொடர்ச்சியாக, இன்று தேன்கனிகோட்டை சந்தை தெருவில், தேன்கனிக்கோட்டை உழவர் சந்தைக்கு அருகே, கோட்டை வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மற்றும் அண்ணா நகரில் அமைந்துள்ள சேலம் மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான நம்பிக்கையாளர்கள் அலகு குத்தி, பறக்கும் காவடிகள் எடுத்து தங்களது நேர்த்தி கடனை தீர்க்கும் விதமாக தேர் பேட்டை மாரியம்மன் கோவில் வரை நம்பிக்கை முழக்கங்களுடன் ஊர்வலமாக வந்தனர். சில பெண்கள் கார் மற்றும் ஆட்டோக்களை அலகினால் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.








