Rare Two-Foot-Tall Punganur Cow and Bull Draw Attention Near Hosur | Hosur News Update - Video
Rare Two-Foot-Tall Punganur Cow and Bull Draw Attention Near Hosur
📅 வெளியீடு நாள்: 23-02-2026
📄 விளக்கம்
A rare Punganur dwarf cow and bull, measuring only around two feet in height, drew attention during a recent spiritual visit near Hosur.
The breed originates from the Chittoor region of Andhra Pradesh and is known for producing approximately one litre of milk per day with high fat content.
According to informed sources, the price of these cattle ranges from ₹50,000 to ₹2.5 lakh. Experts advise potential buyers to seek guidance from knowledgeable breeders before purchasing to avoid financial loss.
The unique appearance of the cattle created curiosity among devotees and visitors.
ஓசூர் அருகே இரண்டு அடி மட்டுமே உயரம் கொண்ட பசு மற்றும் காளை மாடுகளை வணங்கிய நம்பிக்கையாளர்கள்.
குருதேவ் ரவிசங்கர் அவர்கள் ஓசூர் வருகையை முன்னிட்டு, வளாகத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு அடி உயரம் மட்டுமே கொண்ட காளை மற்றும் பசு மாடு, கான்போரை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த புங்கனூர் குட்டை இன மாடுகள், ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்தவை. இரண்டு அடி உயரம் மட்டுமே வளருமாம். இவை, நாளொன்றுக்கு சுமார் ஒரு லிட்டர் வரை பால் தருமாம். பாலில் எட்டு விழுக்காடு கொழுப்பு இருப்பதால், இவை சிறப்பானவை என கருதப்படுவதாக இது குறித்து நன்கறிந்தவர், ஓசூர் ஆன்லைனிடம் தெரிவித்தார்.
இவற்றின் விலை, சுமார் 50 ஆயிரம் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும், "வாங்க நினைப்பவர்கள், இந்த இன மாடுகள் குறித்து நன்கறிந்தவரின் உதவியுடன் மட்டுமே வாங்க வேண்டும், இல்லாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும்" என்ற எச்சரிக்கை வழங்கிச் சென்றார்.








