HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  பெண்டாட்டியை காணவில்லை என ஏரிக்கரை தாமோதரன் புகார்
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - பெண்டாட்டியை காணவில்லை என ஏரிக்கரை தாமோதரன் புகார்

ஓசூரில், வீட்டில் இருந்த பெண்டாட்டி காணாமல் போய்விட்டதாக ஒருவர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை அருகேயுள்ள பெருங்களத்தூர் அடுத்த ஆலம்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் 36 வயதாகும் தாமோதரன்.

இவரது மனைவி 25 வயதாகும் லலிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் அலசநத்தம் முதல் குறுக்கு தெருவில் வாழ்ந்துவந்தனர்.

தனியார் நிறுவனத்தில் தாமோதரன் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த, 22 (திங்கள் கிழமை) அன்று, பிற்பகலில் வீட்டிலிருந்து வெளியே சென்ற லலிதா, இரவில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

எங்கு தேடியும் அவரது இருப்பிடம் கண்டரிய முடியவில்லை.

அதிர்ச்சியடைந்த தாமோதரன், கடந்த நாள் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போனதாக சொல்லப்படும் லலிதாவை தேடி வருகின்றனர்.

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்