ஓசூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆய்வு கூடத்தில் பணிபுரியும் தண்டபாணி என்பவர் Polo App என்கிற செயலியை பயன்படுத்தி ஆண் ஜோடியுடன் பழகி வந்தாராம்.
கடந்த அக்டோபர் 30 அன்று நள்ளிரவு ஒரு மணியளவில், தண்டபாணியின் ஆண் ஜோடி, ஓசூர் ராயக்கோட்டை சாலை செந்தில் நகர் அருகே அமைந்துள்ள VGP Layout-ல் உள்ள ஒரு காலி மனைக்கு வருமாறு மொபைலில் Location அனுப்பியுள்ளார். அதனை நம்பி தண்டபாணியும் அந்த நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே இருந்த மூவர், தண்டபாணி கத்திமுனையில் வளைத்து பிடித்து, அவரிடமிருந்த 5000 ரூபாய் பணம், கைபேசி, வங்கியில் இருந்த பணம் என அனைத்தையும் சுருட்டிக் கொண்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து நவம்பர் 1 அன்று தண்டபாணி ஓசூர் நகர காவல் நிலையத்தில் நேரில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் மூன்று குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இத்தகைய செயலிகளை பயன்படுத்தி நட்பு ஏற்படுத்துவோர் குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.