HosurOnline

மர்ம காய்ச்சலால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு குடியிருப்பில் 3 வயது சிறுமி பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த கே திப்பனப்பள்ளி பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வரும் தொழிலாளி மூர்த்தி என்பவரது மூன்று வயது மகள் விண்ணரசி கடந்த ஆறாம் நாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாராம். 

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த நிலையில், பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  மருத்துவம் பலனளிக்காத நிலையில் கடந்த நாள் உயிரிழந்துள்ளார். 

சிறுமியின் இறப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து மக்கள் நலத்துறையினர் வினவி வருகின்றனர்.  இதற்கு இடையே குருபரப்பள்ளி காவல்துறையினர் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.