Hosur’s Hidden Road Hack! 🚧 300m Work = 3km Free Road! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur’s Hidden Road Hack! 🚧 300m Work = 3km Free Road!

📅 வெளியீடு நாள்: 22-09-2025

📄 விளக்கம்

Did you know Hosur can solve its traffic mess with a simple shortcut? 🤯
👉 By laying just 300 meters of new road, nearly 3 kilometers of alternate route can be opened!

📍 Location: Near the upcoming bus stand & Attko Police Station
✅ Helps bypass traffic during bridge work
✅ Saves crores in waiting time & construction delays
✅ Uses already existing Housing Board layouts

Volunteers & public urge the District Collector to act quickly. Will this smart move be taken?

#Hosur #TrafficSolutions #SmartCity #Infrastructure #TamilNadu #UrbanPlanning #HosurOnline

ஓசூரில் அதிசயம்! 300 மீட்டருக்கு சாலை அமைத்தால், 3000 மீட்டர் நீள சாலை, விலை இல்லாமல் கிடைக்கும்!

கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் துவங்கி ராயக்கோட்டை சாலை வரை, புதிதாக மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை இணைப்பு சாலை அமைப்பதற்கு, 50 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சாலை நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும்.

புதிய பேருந்து நிலையம் எதிர்புறம், தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி விரைவில் துவங்க இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று பாதை தேவை. இதற்கு ஒரு எளிமையான தீர்வு, அட்கோ காவல் நிலையம் எதிர்புறம் துவங்கி, கேட்பாரற்று கிடக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை பிரிவுகளின் சாலையை பயன்படுத்தி, முனீஸ்வரன் கோவில், வக்கீல் ஹவுசிங் வழியாக, பழைய ராயக்கோட்டை சாலையை சென்றடைய வழி ஏற்படுத்துவது.

இதற்கு 300 மீட்டர் அளவிற்கு சாலை அமைத்தால் போதும். மூன்று கிலோமீட்டர் நீள மாற்று பாதை சாலை கிடைத்துவிடும். மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்தி, ஏற்கனவே இருக்கும் இணைப்புச் சாலையை, விரைவாக மேம்படுத்தி தர, தன்னார்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads