Power Outage Schedule Announced for Hosur and Surrounding Areas This Month | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Power Outage Schedule Announced for Hosur and Surrounding Areas This Month

📅 வெளியீடு நாள்: 01-02-2026

📄 விளக்கம்

Maintenance work has been announced at multiple power substations in and around Hosur this month, which may lead to temporary power outages on selected dates. Officials have stated that the schedule is subject to change and consumers are advised to confirm with local electricity board officials.

Power disruption may occur on February 5 in Anthivadi and nearby areas, February 7 in Minnagar, Jujuvadi and Bagalur areas, and February 10 in Thally, Rayakottai, Sulagiri and surrounding regions.

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி துணை மின் நிலையங்களில், இம்மாதத்தில் மராமத்து பணிகள், அதனால் ஏற்பட இருக்கும் மின் தடை நாட்கள் குறித்த அறிவிப்பு.

அறிவிக்கப்பட்ட மின்தடை நாட்களில் மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளதால், உங்கள் பகுதி மின்வட ஆய்வாளர் அல்லது மின்வாரிய மேற்பார்வையாளரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பிப்ரவரி 5ஆம் நாள் வியாழன் கிழமை, ஓசூர் அந்திவாடி துணை மின் நிலையத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், அந்திவாடி, முனீஸ்வரன் நகர், மத்திகிரி மற்றும் அவை சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்.

பிப்ரவரி 7ஆம் நாள், சனி என்கிற காரிக்கிழமை ஓசூர் மின்நகர், ஜுஜுவாடி, பேகேபள்ளி ஆகிய துணை மின் நிலையங்களிலும்.

பிப்ரவரி 10ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, தளி, ஜவலகிரி, கெம்பட்டி, ராயக்கோட்டை, உத்தனபள்ளி, சூளகிரி, காமன்தொட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலும் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads