Irregularities Reported in Shop Leasing at Hosur’s MGR Market; Junior Assistant Suspended | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Irregularities Reported in Shop Leasing at Hosur’s MGR Market; Junior Assistant Suspended

📅 வெளியீடு நாள்: 01-02-2026

📄 விளக்கம்

At Hosur’s MGR Market, confusion arose after lease letters were reportedly issued to multiple individuals for the same shops following a Corporation auction. Traders submitted complaints to the Corporation Commissioner, who later conducted a field inspection. Based on the findings, a Junior Assistant has been suspended, and officials say further inquiry is underway.

ஓசூர் மாநகராட்சி, ஒரே கடையை பலருக்கு ஒரே நேரத்தில் வாடகைக்கு விட்டுள்ளதா?. அதிர்ச்சியில் கடையை வாடகைக்கு எடுத்த வியாபாரிகள்.

ஓசூரில் பழமையான அடையாளங்களில் ஒன்றான எம் ஜி ஆர் மார்க்கெட், புதுப்பொலிவு பெற்று, மாநகராட்சி ஏல முறையில், கடைகள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுமார் மூன்று கடைகளை, ஒவ்வொரு கடையையும் பல்வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடுத்ததாக ஒப்பந்தம் போட்டு மாநகராட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பலரும் ஒரே நேரத்தில் ஒரே கடையை உரிமை கோரியதால், மாநகராட்சி ஆணையருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர் கள ஆய்வு மேற்கொண்டதில், முறைகேட்டை கண்டறிந்து, இளநிலை உதவியாளர் சரண்ராஜ் என்பவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.

சரண்ராஜ், தாமாக இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், மேல்மட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடனையே செயல்பட்டு இருக்கலாம் என சில தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads