Daily Hosur News · Video
Hosur Court Judges and Lawyers Promote Mediation: A Path to Final Settlement and Fee Refunds
விளக்கம்
A report on the awareness initiative at the Hosur Court complex. The article explains how the Mediation Center works, the lack of appeal options for mediated settlements, and the financial benefit of receiving a full court fee refund upon successful resolution.ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களிடம் ஆர்வத்தை தூண்டிய ஒரு நிகழ்வு!
"சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்" என்பது பெரியவர்கள் கூறிச் சென்ற மிகச்சிறந்த அறிவுரை. அதையே வழிமொழியும் விதமாக, இன்று காலை நீதிமன்ற வளாகத்தில், நீதிமன்ற நடுவர்களும், வழக்கறிஞர்களும் பாதைகள் ஏந்தியபடி துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி, "வழக்காடுவதை காட்டிலும் உங்கள் எதிரிகளிடம் நீங்களே சமரசம் செய்து கொள்ளுங்கள்" என்று அறிவுரை வழங்கினர்.
நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளை கூட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் சமரச மையத்திற்கு மாற்றி, எதிர் தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டிக் கொள்ளலாம். தீர்வு கிடைக்கவில்லை என்றால், நீதிமன்ற வழக்கை தொடரலாம்.
நீதிமன்றம் மூலமாக வழங்கப்படும் தீர்ப்புகள் மேல்முறையீட்டிற்கு வழி வகுக்கலாம். ஆனால் சமரச மையத்தின் மூலம் ஏற்படும் தீர்வுகளுக்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இல்லாததால், இறுதி தீர்வாக அமையும்.
இவ்வாறு சமரச மையத்தில் தீர்வு எட்டப்பட்டால், நீங்கள் செலுத்தி இருந்த முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
மேற்கொண்டு தகவல்களுக்கு, ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் சமரச மையத்தை அணுகவும்.