HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Abandoned Ganesha Idols Desecrated in Hosur: Residents Demand Corporation Action and Park Construction

Published: 02-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A report on the deteriorating situation in the Palayam area of Hosur, where unsold Ganesha idols left by migrant workers are being disrespected. The article highlights the community's plea for the Hosur Corporation to intervene, clear the site respectfully, and utilize the land for its intended purpose as a public park.

ஓசூரில் அவமதிப்பிற்கு உள்ளாகும் விநாயகர் சிலைகள்!

தளி சாலை வேளாங்கண்ணி பள்ளி பின்புறம், பாளையம் பகுதியில், மாநகராட்சியின் நிலத்தில் வட மாநிலத்தவர் கூடாரங்கள் அமைத்து தங்கி, விநாயகர் சிலைகளை உற்பத்தி பெய்த நிலையில், விற்பனையாகாத சுமார் 200 சிலைகளை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

இரவு நேரத்தில் அந்த கூடாரங்களை குடிப்பதற்கு பார்களாக மாற்றியவர்கள், பிள்ளையார் சிலைகள் மீது அமர்ந்து குடித்தது மட்டுமல்லாமல், அவற்றை மரியாதையற்ற வகையில் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கி உள்ளனர்.

மாநகராட்சி உடனடியாக இதில் தலையிட்டு, பிள்ளையார் சிலைகளை, உரிய மரியாதையுடன் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அப்பகுதி மீண்டும் குடிகாரர்களின் கூடாரமாகாதபடி, பூங்காவிற்கு என ஒதுக்கப்பட்ட அந்த நிலத்தில் உடனடியாக பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads