Couple Attacked While Coming to Vote Near Anchetty; Later Cast Vote Under Protection | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Couple Attacked While Coming to Vote Near Anchetty; Later Cast Vote Under Protection

📅 வெளியீடு நாள்: 24-04-2026

📄 விளக்கம்

A couple from Sithandapuram near Anchetty was reportedly attacked when they returned to their village to vote.

The couple, who had married against family opposition and are currently residing in Hosur, were allegedly stopped by relatives.

They were admitted to a government hospital.

Election officials later ensured that they were able to cast their vote under police protection.

ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே வாக்களிக்க வந்த தம்பதியரை, வாக்களிக்க விடாமல் தடுத்து தாக்கிய உறவினர்கள்.

அஞ்செட்டி அருகே சித்தாண்டபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் 26 வயது மன்னார் மற்றும் 23 வயது கீர்த்திகா. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் கடந்த 2023ஆம் ஆண்டு இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்களாம். இப்போது ஓசூரில் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் வாக்களிக்க ஊருக்கு வந்த இருவரையும் இரு வீட்டார் உறவினர்கள் வாக்களிக்க விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தினராம். இதில் காயமடைந்த இருவரும், நண்பர்களால் மீட்கப்பட்டு தேன்கனிக்கோட்டையை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இத்தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் அலுவலர், காவல் துறை பாதுகாப்பு வழங்கி, இருவரையும் அவர்களது ஊரில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads