Hill Villages Near Hosur Seek Primary Health Center for 14,000 Residents | Hosur News Update - Video
Hill Villages Near Hosur Seek Primary Health Center for 14,000 Residents
📅 வெளியீடு நாள்: 08-03-2026
📄 விளக்கம்
Residents of Bettamugilalam and Kodagarai hill villages near Hosur have appealed to the Tamil Nadu government to establish a Primary Health Center in the region.
Located in dense forest terrain at an elevation of nearly 4,000 feet above sea level, these villages and more than 50 surrounding hamlets are home to around 14,000 people, many of whom belong to the Irular tribal community.
At present, residents must travel nearly 30 kilometers through forest routes to reach Unisetti for medical assistance, making emergency treatment extremely difficult.
Villagers have requested immediate government intervention to improve healthcare access in the region.
பெட்டமுகிலாளம் மக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுக்கும் முதன்மையான கோரிக்கை என்ன?. அடர்ந்த காட்டுப் பகுதி நடுவே, கடல் மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரம் அடி உயரத்தில், மலை மீது அமைந்துள்ள ரெட்டையர்கள் "பெட்டமுகிலாளம்" மற்றும் "கொடகரை" ஊர்கள். இந்த ஊர்களையும் சுற்றி, ஐம்பதற்கும் மேற்பட்ட சிற்றூர்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 14,000 மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் "இருளர்" என்கிற பழங்குடி இன மலைவாழ் மக்கள். மருத்துவ முதலுதவி வேண்டுமென்றால் கூட, சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உனிசெட்டி என்கிற ஊரைச் சென்றடைய வேண்டும். அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக செல்ல வேண்டும் என்பதால், இரவு நேரங்களில், மருத்துவ உதவியை நாடுவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. ஆகவே அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி, "துவக்க நிலை நல நடுவம்", அதாவது "Primary Health Center" அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.








