₹20 Crore 50-Bed Government Hospital in Denkanikottai Awaiting Opening | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

₹20 Crore 50-Bed Government Hospital in Denkanikottai Awaiting Opening

📅 வெளியீடு நாள்: 18-02-2026

📄 விளக்கம்

A 50-bed government hospital built at an estimated cost of ₹20 crore in Denkanikottai has reportedly completed construction but is yet to be opened for public use. Hospitals announced under the same scheme in Sivakasi and Chidambaram are already operational. Residents have called upon local authorities to clarify the delay and ensure the facility is made functional at the earliest.

தேன்கனிக்கோட்டையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், திறக்கப்படாமல் இருப்பது ஏன்?

தேன்கனிக்கோட்டை புதிய அரசு மருத்துவமனை திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை செயல்பாட்டிற்கு ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், "தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை கட்டிடப் பணி முடிவுற்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படாமல் இருப்பதன் பின்னணியில் யாராவது உள்ளனரா?" என்ற கேள்வியை தன்னார்வலர்கள் எழுப்புகின்றனர்.

மருத்துவத் துறை சார்ந்த சிலரின் கூற்றுப்படி, "தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, தேன்கனிக்கோட்டை புதிய அரசு மருத்துவமனை திறக்கப்படுவதை தடுக்கிறார்களோ?" என்ற அச்சம் நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.

தேன்கனிக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் நல அமைச்சர், இது தொடர்பில் கவனம் செலுத்தி விரைவில் இந்த மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads