Is Vetiver Cultivation Possible in Hosur’s Cool Climate? Farmers Experiment with Grow Bag Method | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Is Vetiver Cultivation Possible in Hosur’s Cool Climate? Farmers Experiment with Grow Bag Method

📅 வெளியீடு நாள்: 19-02-2026

📄 விளக்கம்

Vetiver cultivation, traditionally associated with hot and dry regions, is being experimented with in Hosur’s relatively cool and hilly climate. Along the Onnalvadi–Kelamangalam Road, farmers are growing vetiver in grow bags with drip irrigation, adapting the crop to local conditions through controlled techniques. The development raises questions about the potential of alternative crops that require relatively less water and labour in the region.

ஓசூரில் வெட்டிவேர் சாகுபடி செய்ய இயலுமா?

குளிர்ச்சியான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வெட்டிவேர் சாகுபடி குறித்து வேறுபட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், ஒன்னல்வாடி - கெலமங்கலம் சாலையில் Growbag முறையில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலம் ஒன்று கவனத்தை ஈர்த்தது.

சொட்டு நீர் பாசன வசதியுடன் Growbag-குகளில் நடப்பட்டிருந்த வெட்டிவேர், ஓசூர் பகுதிக்கே உரிய வெப்ப தட்ப நிலைக்கு ஏற்ப வளர்க்கப்பட்டு வருவதாக, இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சம்பத் தெரிவித்தார்.

“கடுமையான வெயில் மற்றும் வறண்ட நிலங்களில் வெட்டிவேர் சிறப்பாக விளையும். ஓசூரில் Growbag மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பாசன முறையில் தொழில்நுட்பம் சார்ந்து, வெட்டிவேர் சாகுபடி முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.

ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் இத்தகைய முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வழக்கமான காய்கறி பயிர்களுக்கு மாற்றாக, குறைந்த நீர் மற்றும் குறைந்த மனித உழைப்பு தேவைப்படும் இத்தகைய மாற்றுப் பயிர்களை சிந்திக்கலாமா என்ற கருத்துக்களை இது எழுப்புகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads