Hosur: Allegation of ₹2 Crore Loan Repayment Misappropriation at Private Finance Company | Hosur News Update - Video
Hosur: Allegation of ₹2 Crore Loan Repayment Misappropriation at Private Finance Company
📅 வெளியீடு நாள்: 20-02-2026
📄 விளக்கம்
Hosur witnessed a protest after allegations surfaced that over ₹2 crore in loan repayment money was misappropriated at a private finance company’s branch. Borrowers claim their repayments were not properly accounted for. Members of the Communist Party staged a protest demanding accountability and resolution for affected customers. Further investigation and response from the company are awaited.
ஓசூரில் 2 கோடி ரூபாய்க்கு மேல் கடனை திருப்பி செலுத்திய பணம் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் மற்றும் உடன் பணிபுரிந்த ஊழியர்கள் சுருட்டியதாக குற்றச்சாட்டு.
ஓசூரில், தனியார் நிதி நிறுவனம் ஒன்று வீட்டுக் கடன், சொத்தின் பேரில் தொழில் கடன், வண்டிகளுக்கான கடன் போன்ற பல்வேறு கடன் சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
ஓசூர் கிளையின் மூலம் கடன் பெற்ற சிலர், திருப்பி செலுத்திய பணத்தை, முறையாக வரவு வைக்காமல் நிறுவனத்தின் ஊழியர்கள் கையாடல் செய்ததாகவும், இதற்கு தனியார் நிதி நிறுவனம் பொறுப்பேற்று தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அந்நிறுவனத்தின் ஓசூர் கிளை வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.








