50,000+ Ganesh Idols Under Production in Hosur as Artisans Prepare for Ganesh Chaturthi | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

50,000+ Ganesh Idols Under Production in Hosur as Artisans Prepare for Ganesh Chaturthi

📅 வெளியீடு நாள்: 30-05-2026

📄 விளக்கம்

Ahead of Ganesh Chaturthi, Hosur has become a bustling center of idol-making, with more than 50,000 Ganesh idols being crafted by skilled artisans.

ஓசூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உற்பத்தியாகும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்.

ஓசூர் தளி சாலையில் மற்றும் அந்திவாடி சாலை சந்திப்பு முதல், மத்திகிரி கூட்ரோடு வரை, ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள், கூடாரங்கள் அமைத்து, விநாயகர் சிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சிலைகள் பி ஓ பி எனப்படும் ஜிப்சம் மற்றும் தேங்காய் நார் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகிறது. இதனால், சிலைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது, சிதிலமடைவது கிடையாது. மேலும், மழை மற்றும் தண்ணீரில் அவ்வளவு எளிதாக கரைந்து விடாது.

நுணுக்கமான கலை நயத்துடன், 20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சில்லறை விலையில் விநாயகர் சிலைகள் இங்கு கிடைக்கின்றன. மொத்த விற்பனையாளர்கள், சலுகை விலையில் வாங்கிச் செல்லலாம்.

ஓசூரில் இத்தகைய தரம் மிகுந்த, கலை நயம் மிக்க, அதிர்வு மற்றும் நீர் எதிர்ப்பு தன்மை கொண்ட விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்படுவது ஓசூருக்கு மற்றொரு பெருமை.

இந்த கலை நயமிக்க சிலை வேலைப்பாடுகளை மேற்கொள்ளும் வட இந்திய தொழிலாளர்களை மனதார பாராட்டலாமே!

பகிர்: WhatsApp Twitter Facebook Threads