Hosur-Anchetty Shiva Temple Festival Stalled for 15 Years Amid Management Dispute | Hosur News Update - Video
Hosur-Anchetty Shiva Temple Festival Stalled for 15 Years Amid Management Dispute
📅 வெளியீடு நாள்: 22-09-2026
📄 விளக்கம்
A centuries-old Shiva temple at Mukandagam near Anchetty, Hosur, has reportedly not conducted its annual festival for around 15 years. Local residents say a dispute over the management and maintenance of the temple and its approximately 15-acre property has resulted in a court case. They are seeking the District Collector's intervention to enable the temple festival and maintenance activities to resume.
காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த பழமையான சிவன் கோவிலுக்கு தேர் இருக்கிறது... தேரை இழுப்பதற்கு சுமார் 250 குடும்பங்கள் இருக்கின்றன... ஆனால், அரசியல் தலையீட்டால் கடந்த 15 ஆண்டுகளாக தடைபட்டு நிற்கிறதா கோவில் திருவிழா?
ஊர் இரண்டு பட்டால் சிலருக்கு கொண்டாட்டம் என்பார்கள்... இங்கே அரசியல் தலையீட்டால், கோவில் கொண்டாட்டமே இல்லாமல் இரண்டு பட்டு கிடக்கிறது!
ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே, அர்த்தக்கல் அடுத்த மடக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட முகண்டகத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. ஆலயத்திற்கு சுமார் 15 ஏக்கர் நிலமும் உள்ளது.
உளிபண்டா, சம்கே மரதொட்டி, புரத்தையன் தொட்டி மற்றும் முகண்டகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆலயத்தையும் அதன் நிலத்தையும் பராமரிப்பதில், அரசியல் கட்சியினரின் தலையீட்டால், நீதிமன்ற வழக்கு, அதனால் கோவில் திருவிழா நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, அரசியல் தலையீடுகளைத் தடுத்து, ஆலய பராமரிப்பு பணிகளும், ஆண்டு திருவிழாவும் தொடர்ந்து நடைபெற சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








